24 Tamil Movie Rating : 3.5/5
முதன் முறையாக சூர்யா மூன்று கதாபாத்திரத்தில் நடிக்க, புதுமுக இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் "24". அஞ்சான் படத்திற்கு பிறகு சூர்யா-விற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நடிகர்கள் : சூர்யா, சமந்தா, நித்யா மேனன்
இசை : ஏ ஆர் ரஹ்மான்
ஒளிப்பதிவு : எஸ் திருநாவுக்கரசு
படத்தொகுப்பு : பிரவின் புடி
தயாரிப்பு : சூர்யா (2டி எண்டர்டைன்மென்ட்)
கதை, திரைக்கதை, இயக்கம் : விக்ரம் கே குமார்
விமர்சனம்:
இரட்டை பிறவிகளாக வரும் சூர்யா சகோதரர்களில் முதல் சகோதரர் வில்லன் ஆத்ரேயா, இரண்டாவது சகோதரர் ஒரு விஞ்ஞானி சேதுராமன். விஞ்ஞானியான இவர் தன் பல வருட ஆராய்ச்சியின் பயனாக ஒரு டைம் மிஷினை கைக் கடிகார வடிவில் கண்டுபிடிக்கிறார். அத்தகைய கடிகாரம் அதனைக் கட்டி இருப்பவரை 24 மணி நேரங்கள் முன்னும், பின்னும் அழைத்து சென்று அவர் விரும்பிய நிகழ்வுகளை மாற்றி அமைத்துக் கொள்ள வழிவகை செய்யும் திறன் வாய்ந்தது. அத்தகைய கடிகாரத்தை அடையத் துடிக்கும் வில்லன் ஆத்ரேயா, அதற்காக சேதுராமனின் குடும்பத்தையும், குழந்தையையும் அழிக்க நினைக்கிறார்.
ஆத்ரேயாவின் முயற்சிகள் தோல்வியடைய, அதிலிருந்து தப்பிக்கிறது குழந்தையும், அந்த டைம் மிஷினும். அந்த குழந்தை தான் மூன்றாவது சூர்யாவாகிறார். அவர் டைம் மிஷினின் உதவியுடன் தன் பெரியப்பா ஆத்ரேயாவை பழி தீர்த்ததாரா? தன் பெற்றோரை முற்காலத்திற்கு சென்று மீட்டாரா? இல்லையா? என்பதே 24 படத்தின் மீதிக்கதை.
இதனை காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட் கலந்து 2.45 மணி நேரத்திற்கு செம விருந்தாக படைத்திருக்கிறார் விக்ரம் குமார்.
டாக்டர் மற்றும் விஞ்ஞானி சேதுராமன், அவரின் மகன் வாட்ச் மெக்கானிக் மணி, வில்லன் சகோதரர் ஆத்ரேயா ஆகிய மூன்று கதாபாத்திரங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார் சூர்யா. சில இடங்களில் காமெடியிலும் கலக்கியிருக்கிறார் சூர்யா.
அப்பா சூர்யாவிற்கு மனைவியாக நித்யா மேனன், மகன் சூர்யாவின் மாமன் மகளாக சமந்தா ஆகியோர் அவரவர் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக நடித்துள்ளனர். வளர்ப்புத் தாயாக வரும் சரண்யா பொன்வன்னனின் கதாபாத்திரம் வழக்கம் போல சிறப்பாக உள்ளது.
ஏ ஆர் .ரஹ்மானின் இசையில் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட், பின்னணி இசையிலும் புகுந்து விளையாடியிருக்கிறார். எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் பிரமாதம். அதிலும் சூர்யா – சமந்தா சம்பந்தப்பட்ட காதல் காட்சிகளில் மழை துளிகளை அப்படியே பாதியில் பிரீஸ் செய்வது, டைம் மிஷின் ஆய்வு கூட மிரட்டல்கள், பாடல் காட்சிகள் எல்லாம் சிறப்பு.
மொத்தத்தில் "2.44" மணி நேரத்தில் எடுக்கப்பட்ட "24" - ஐ ஒரு முறை பார்க்கலாம்..!!
0 comments:
Post a Comment